DMKSocial

The Feed, page 212

Showing 4,221–4,240 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Welfare Schemes

பொங்கல் திருநாளை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிட அரசின் சார்பில் சிறப்புப் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுவரும் பணிகளை இராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை...

பொங்கல் திருநாளை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிட அரசின் சார்பில் சிறப்புப் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுவரும் பணிகளை இராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தேன். தரமாக வழங்கப்படும் பரிசுப் பொருட்களை #Covid19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பெற்றிடுவீர்! https://t.co/II2ymA8RCZ

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2627
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Governance & Administration

திராவிட இயக்கத்தின் தாய்வீடான ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி; நலத்திட்ட உதவிகளை...

திராவிட இயக்கத்தின் தாய்வீடான ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி; நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். புதிய பேருந்து நிலையங்கள், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டேன். https://t.co/Nx0NGwUA1O

Governance & Administration
𝕏 X
4 yr ago
1712
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Industry & Investment

#ISBACON அமைப்பின் 14-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்து, வரும் நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும் என்ற...

#ISBACON அமைப்பின் 14-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்து, வரும் நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும் என்ற எனது நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்; மாறிவரும் சூழலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய தொழிற்களங்களை முயன்று பார்க்க ஊக்குவித்தேன். https://t.co/NJEVXTNaZe

Industry & Investment
𝕏 X
4 yr ago
1963
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Health

பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் - முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும்; 60 வயதிற்கு...

பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் - முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும்; 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தவணை #Covid19 தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். https://t.co/OR5GLjEcA6

Health
𝕏 X
4 yr ago
2218
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Health

மேலும், ஏழை எளியோர் பயன்பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துச் செயல்படுத்துவதற்கான ஆணையை...

மேலும், ஏழை எளியோர் பயன்பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துச் செயல்படுத்துவதற்கான ஆணையை வழங்கி; அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களையும் இதில் பயனாளிகளாக இணைத்துக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினேன்.

Health
𝕏 X
4 yr ago
786
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Governance & Administration

அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே...

அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொருட்கள் வழங்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் கண்காணித்து உறுதிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன். https://t.co/Cd01R89ooi

Governance & Administration
𝕏 X
4 yr ago
4386
472
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Health

#Covid19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட...

#Covid19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன். தோழர் அவர்களைக் கவனித்துக் கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

Health
𝕏 X
4 yr ago
2285
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Federalism & Centre–State Relations

சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் சட்டமியற்றும்...

சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையிலும்; மக்களாட்சித் தத்துவத்துக்கும் சட்டமன்ற இறையாண்மைக்கும் எதிராகவும் உள்ளது. 1/3 https://t.co/8nQ77fuB6R

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
3375
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Social Justice & Reservation

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிற மாநிலங்களும் நீட் தேர்வின் பாதகங்களை உணரும் வகையில் ஒருமித்த...

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிற மாநிலங்களும் நீட் தேர்வின் பாதகங்களை உணரும் வகையில் ஒருமித்த கருத்து ஏற்படுத்திடவும்; நீட் தேர்வினை நீக்கிட ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதென்றும் முடிவுசெய்யப்பட்டது. 2/3 https://t.co/5HZq6NV4xy

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1048
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Social Justice & Reservation

மேலும், ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாகப் பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அவரைச்...

மேலும், ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாகப் பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அவரைச் சந்திக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 3/3 https://t.co/8ohcLSWHGo

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1007
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
International & Diaspora

In my letter to Hon'ble @DrSJaishankar, I thanked him for securing the release of 12 Tamil Nadu fishermen. I've also requested him to expedite...

In my letter to Hon'ble @DrSJaishankar, I thanked him for securing the release of 12 Tamil Nadu fishermen. I've also requested him to expedite the release of 56 fishermen who are still languishing in Sri Lankan prisons since Dec 19 & 20th and to retrieve 75 fishing boats. https://t.co/kxy6TolXli

International & Diaspora
𝕏 X
4 yr ago
1846
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Governance & Administration

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, நமது அரசு நெருக்கடிகள் மிகுந்த - குறுகிய காலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும்...

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, நமது அரசு நெருக்கடிகள் மிகுந்த - குறுகிய காலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டேன். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் என்றும் வீறுநடை போடுவோம்! தமிழ்நாடு முதல் மாநிலமாகும்! https://t.co/mCa8XdCRGb

Governance & Administration
𝕏 X
4 yr ago
4366
318
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Social Justice & Reservation

PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், 27% #OBCreservation செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால்...

PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், 27% #OBCreservation செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி! #EWS அநீதியையும் வெல்வோம்! https://t.co/eDIDtZhK7w #ReservationIsOurRight https://t.co/WNevo7nGfU

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3395
195
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Governance & Administration

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலுரை https://t.co/aeJx8kaN2T

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலுரை https://t.co/aeJx8kaN2T

Governance & Administration
𝕏 X
4 yr ago
2292
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Federalism & Centre–State Relations

ஆளுநருக்குப் பதிலாக மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை, மெட்ரோ இரயில் சேவையை வண்டலூர் வரை நீட்டிப்பது...

ஆளுநருக்குப் பதிலாக மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை, மெட்ரோ இரயில் சேவையை வண்டலூர் வரை நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பான விளக்கங்களை மாண்புமிகு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலாக அளித்தேன். https://t.co/wRDwH65sqF

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
3506
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Federalism & Centre–State Relations

மாணவர்களின் கனவினை #NEET சிதைக்கிறது; சட்டமுன்வடிவில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்; முறையிடச் சென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவே...

மாணவர்களின் கனவினை #NEET சிதைக்கிறது; சட்டமுன்வடிவில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்; முறையிடச் சென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவே மறுக்கிறார் @HMOIndia அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது. நீட் விலக்கே நம் இலக்கு! https://t.co/VvHckLSDfc

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4524
201
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Health

சென்னையில் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை/சிகிச்சை மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்வதற்காக 42 சிறப்பு ஆம்புலன்ஸ்...

சென்னையில் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை/சிகிச்சை மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்வதற்காக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைத்தேன். பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு இச்சேவையைப் பெறலாம். https://t.co/6cLPj3PiYS

Health
𝕏 X
4 yr ago
2278
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Health

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் #Covid19 சிகிச்சை மையத்தை பார்வையிட்டேன். #Omicron பரவலை எதிர்கொள்ள நமது அரசு அனைத்து...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் #Covid19 சிகிச்சை மையத்தை பார்வையிட்டேன். #Omicron பரவலை எதிர்கொள்ள நமது அரசு அனைத்து முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடியுங்கள் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். https://t.co/FIkj51zF3w

Health
𝕏 X
4 yr ago
4233
171
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Health

தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்புகையில், சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கு முகக்கவசம்...

தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்புகையில், சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன். அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்! தடுப்பூசி- முகக்கவசம்- கிருமிநாசினி- தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பீர்! https://t.co/Xex4Nk9jh5

Health
𝕏 X
4 yr ago
9404
513
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Welfare Schemes

நாமெல்லாம் ஓரினம் - தமிழினம் என்கிற உயரிய சமத்துவ எண்ணம் மிளிர உழவுக்கும் அதற்குத் துணைநிற்கும் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்கம்...

நாமெல்லாம் ஓரினம் - தமிழினம் என்கிற உயரிய சமத்துவ எண்ணம் மிளிர உழவுக்கும் அதற்குத் துணைநிற்கும் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்கம் செலுத்திடும் தமிழர் திருநாளாம் பொங்கலைத் தமிழக மக்கள் மகிழ்வுடன் கொண்டாடச் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்குவதைத் தொடங்கி வைத்தேன். https://t.co/FmjXmssWYD

Welfare Schemes
𝕏 X
4 yr ago
3051
199
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41