
#LIVE: திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/I8r6z9EjDW
#LIVE: திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/I8r6z9EjDW
All
Showing 3,701–3,720 of 9,209 posts

#LIVE: திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/I8r6z9EjDW

I request Hon'ble @PMOIndia to organise at least 3 meetings of the Inter-state Council every year. To strengthen the spirit of #CoOperativeFederalism, I strongly suggest that every bill of national importance be placed before the council before it is introduced into Parliament. https://t.co/odY2MMCX17



I condemn the outrageous act of political vendetta against Congress party and its leaders Tmt Sonia Gandhi and Thiru @RahulGandhi by the ruling BJP govt using the Enforcement Directorate. (1/2)

Having no answers to the pressing issues of the common man, BJP uses such diversionary tactics to save itself from the public ire. Political opponents should be fought politically, not by 'forcing' the Enforcement Directorate. (2/2)

ஆட்சிக்கு வந்ததும் ITI மாணவர்கள் நேரடியாகப் பட்டப்படிப்பில் சேர வழிவகுத்தோம்! தற்போது ITI-களை நவீன திறன் பயிற்சிகளை வழங்கும் தொழில்நுட்ப மையங்களாக @TataTech_News உடன் இணைந்து தரம் உயர்த்தவுள்ளோம். 'நான் முதல்வன்' திட்டத்தால் திறன்மிகு தமிழகத்தை உருவாக்குவோம்! https://t.co/CYIVSkCB9Z

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்! #WorldBloodDonorDay

வடகரை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேனிலைப்பள்ளியை ஆய்வுசெய்தேன். நாடாளுமன்ற - சட்டமன்ற - உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அன்பான வேண்டுகோள்: உங்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குறைகளைத் தெரிவித்து, களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/u7ZfGuI9KL


2025-க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்ற மிகத் தேவையான இலக்குடன் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தைத் தொடங்கிவைத்தேன். கற்றலைக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சிக்குரிய - ஆர்வமூட்டும் செயல்பாடாக மாற்றுவோம்! https://t.co/ROJFA36iBS


#LIVE: 'எண்ணும் எழுத்தும்' தொடக்க விழா https://t.co/5nTJaEppDH

இன்றைய #KolathurVisit-இல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஜமாலியா லேன் பகுதியில் கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, தையல் இயந்திரங்கள், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/t15cfwsQnb

#OnlineGambling பாதிப்புகளை ஆராய்ந்து, இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி போலன்றி, இச்சமூகத்தீமையை ஒழிக்க 'உரிய - உறுதியான' சட்டத்தை நிறைவேற்றுவோம்! பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடுவோம்! https://t.co/VqQJSJGcIQ



Hosting the 44th Chess Olympiad is an absolute honour for Chennai and all our officials are putting assiduous efforts to make it a grand and memorable success in the history of Indian Sports. In the run-up to the prestigious event, I released the official logo & mascot 'Thambi'. https://t.co/qvIEv7GPzB



44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை, சின்னம் மற்றும் 50 நாள் countdown காணொளியினை வெளியிட்டேன். இந்திய விளையாட்டு வரலாற்றில் சென்னையின் பெயர் என்றும் நிலைத்திருக்கும் வகையில் இப்பெருமைமிகு தொடரை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நடத்திக் காட்டிடுவோம். #ChessChennai2022 https://t.co/krxh8QoF9l

தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னபடி தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் எந்த மக்களுக்காக உழைத்தார்களோ - அந்த மக்களுக்கான அரசு! நாலாந்தர அரசு! (2/2) https://t.co/FSopl1Ol82



புதுக்கோட்டையில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். மக்களுக்கான நலத்திட்டங்களை வாக்குவங்கி அரசியல் என்று கொச்சையாக நினைப்பவர்களுக்கு, இது சிலருக்கு இருளர் - குறவர் - மாற்றுத்திறனாளிகள் என சிந்தனையிலும் செயலிலும் விளிம்புநிலை மக்களுடன் இருக்கும் #DravidianModel அரசு! (1/2) https://t.co/eSvgCYnsRm

#Live: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து ஆற்றும் உரை https://t.co/B3UTgwUuyV

சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயரில் பெண் காவலர் பயிற்சிக் கல்லூரி அமைக்கவேண்டும் என விழா மேடையில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக நாளையே அதிகாரிகளுடன் கலந்துபேசுவேன். https://t.co/zQRSGz4uVo

#Live: சிவகங்கை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/SUR1gmGUPU

முத்தமிழறிஞர் கலைஞருக்குப் புகழ் மகுடமாக - அறிவுக் களஞ்சியமாக மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள், ஓராண்டுக்குள் முடித்தே தீர வேண்டும் என்ற வேட்கையோடு நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்துக்குப் பயனளிக்கும் நூலகங்கள், கலைஞர் விரும்பிய அறிவாலயங்கள்! https://t.co/ylM2SBpnBC

மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என #WorldFoodSafetyDay-இல் வலியுறுத்துகிறேன். https://t.co/b0JSgBUSBj
