
#Live: குரோம்பேட்டை MIT-யின் பவளவிழாவைத் தொடங்கி வைத்து உரை https://t.co/KhRD0GkO9S
#Live: குரோம்பேட்டை MIT-யின் பவளவிழாவைத் தொடங்கி வைத்து உரை https://t.co/KhRD0GkO9S
All
Showing 2,881–2,900 of 9,209 posts

#Live: குரோம்பேட்டை MIT-யின் பவளவிழாவைத் தொடங்கி வைத்து உரை https://t.co/KhRD0GkO9S

இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin-க்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன். உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய #DravidianModel பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக்கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவைக் காக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும். அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன். எந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இளைஞரணியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் தொடக்கி வைத்தார்களோ அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன். உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்!


Absolutely heartbroken and appalled by the agonising violence unleashed on women in #Manipur. Where is our collective conscience? The hate and venom are uprooting the very soul of humanity. We must stand united against such atrocities and work towards fostering a society of empathy and respect. The Union Government should take all necessary steps to restore peace in Manipur. #ManipurViolence

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் - அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் 'விசா' வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்டுவோம்! #INDIA வெல்லும்! அதை 2024 சொல்லும்! #LetterToBrethren https://t.co/DsJUnLXfyk

Had a historic and constructive meeting in Bengaluru with secular, democratic leaders. We have formed #INDIA - Indian National Developmental Inclusive Alliance, committed to protecting our nation's pluralistic values from the clutches of divisive politics. History has proven that authoritarians hiding behind the mask of nationalism will ultimately fall! Unity is our strength, and together, #INDIA will triumph!



#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/DSlAQiQ7gO

'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்! பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று! 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

This remarkable feat showcases the strength of our industrial ecosystem and the visionary policies of our #DravidianModel Government. Kudos to all stakeholders for their hard work and dedication. We remain committed to fostering an environment conducive to growth and prosperity. #InvestInTN #ThriveInTN #MakeInTN

ನಮಸ್ಕಾರ ಕರ್ನಾಟಕ! After Patna, we the Secular and Democratic forces are here in beautiful Bengaluru #UnitedForDemocracy. At this crucial juncture, it is essential for us to stand united against the BJP's undemocratic tactics. Karnataka's recent Assembly Election has set a powerful example, as the people rejected BJP's regressive politics. Let's replicate this at the national level. Together, we shall safeguard democracy and ensure a brighter future for our great nation. #OppositionMeeting



#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/2eaUzck3Pi

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_offl அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #JaiBhim திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. @tjgnan ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!



பாசம் என்றாலே மதுரை மக்கள்தான் என்று சொல்லும் அளவிற்கு அன்பால் வாரியணைத்த தூங்காநகரில், மாணவர்களிடையே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தேன். தமிழினத்தின் உயர்வுக்குத் தடைக்கல்லாக விளங்கும் மாயைகளை உடைத்தெறிந்த பகுத்தறிவு இயக்கத்தின் அடித்தளத்தில் கிளர்ந்தெழுந்த திராவிட முன்னேற்றக் கழகம், ஓர் அறிவியக்கம்! அறிவகம் - அறிவாலயம் எனத் தலைமைக் கழகத்துக்குப் பெயரிட்ட கொள்கை இயக்கம்! பேரறிஞர் அண்ணா நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். இப்போது #கலைஞர்100-இல் நாம் #கலைஞர்நூற்றாண்டுநூலகம் அமைத்துள்ளோம்! தென் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கப்போகும் இந்த நூலகத்தை இளைஞர்கள் பயன்படுத்திட வேண்டும்! அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்! #கலைஞர்100நூலகம்

#Live: மதுரையில் #கலைஞர்100நூலகம் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/FN875Q6CGa

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன். அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த #கல்விவளர்ச்சிநாள்-இல், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்!



Education and healthcare have always been the top two priorities of our #DravidianModel Government. Since assuming office, we have diligently implemented various schemes in these sectors, with the aim of positioning Tamil Nadu as a standout performer among Indian states and on par with developed nations. The findings of the State Planning Commission serve as a testament to the visionary nature of our schemes. In today's @the_hindu, @Sang1983 has written about the profound impact of #MakkalaiThediMaruthuvam on the lower-income groups in Tamil Nadu. Let us passionately work towards the continuous development and prosperity of Tamil Nadu, guided by the principles of our #DravidianModel.


பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் தனித்துவமான மத, பண்பாட்டு அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரே மாதிரியான பெரும்பான்மைச் சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியாகவே அமையும். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும். நம் நாட்டின் வரலாற்றுப் பின்னணி எதையும் கருத்தில் கொள்ளாமல் #UniformCivilCode செயல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர முயல்வதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் வலிமை! வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, சமூக நல்லிணக்கம் காப்போம்! #UCCDividesIndia



தேர்தலுக்கு முன்பு #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் துறை, #முதல்வரின்_முகவரி என உருப்பெற்றது. அதன் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில், இன்று இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் - வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் உரையாடி - அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும்!

உயர்ந்த பதவி என்பது அதைவிடப் பன்மடங்கு பொறுப்பையும் கடமையையும் உள்ளடக்கியது! மக்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள்! அவர்களிடம் கனிவாகப் பழகுங்கள், அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதில்தான் இந்த நாட்டை நாம் புரிந்துகொள்வது அடங்கியிருக்கிறது. குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்றிருக்கும் நீங்கள் இனிதான் சமூகத்தைக் கூர்ந்து படிக்க வேண்டும். கற்பதைத் தொடருங்கள்! தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தாருங்கள்!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன். #கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்! #LetterToBrethren https://t.co/cBqRV1hqrg



I have written to Hon'ble @PiyushGoyal to draw his kind attention to the worrying trends in food inflation. Prices of essential commodities have burdened the poor and middle-class families. Our government has implemented short-term and long-term interventions to address this issue, but more support is required. Hence, I request your immediate assistance in expediting imports and allocating 10,000 MT each of wheat and tur dal per month from the central stock.

