
#Live: கொளத்தூரில் கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/XeIfbtQqvT
#Live: கொளத்தூரில் கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/XeIfbtQqvT
All
Showing 2,661–2,680 of 9,209 posts

#Live: கொளத்தூரில் கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிச் சிறப்புரை https://t.co/XeIfbtQqvT

கடந்த இரண்டு நாட்களாக நடத்திய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டங்களின் வெளிப்பாடாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். * குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, 10 வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் 50 பைசாவாகக் குறைத்திருக்கிறோம். * சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாகப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்திவைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள்தான் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தும். இதனை அமைச்சர்களும் - அதிகாரிகளும் தொடர வேண்டும். #களஆய்வில்_முதலமைச்சர்

போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும். #Israel #Palestine

Congratulations to @Guidance_TN for receiving the prestigious United Nations Promotion Award 2023 for their outstanding work in scaling up energy transition investments. 🏆 Guidance_TN's innovative approaches and dedication to climate action are truly remarkable, reflecting our #DravidianModel Govt's commitment to a greener future. I extend my sincere appreciation to Hon'ble @TRBRajaa, Thiru Vishnu IAS (MD & CEO, Guidance TN) along with all the hardworking officials on achieving this proud milestone. @UNCTAD

காவல்துறையினருடனான இன்றைய ஆய்வுக்கூட்டத்தில், ♦️ மக்களின் அச்சத்தைப் போக்கி, குற்றங்களைத் தடுத்திட புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தோடு, #FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ♦️ சாலை விபத்துகளைக் குறைத்திடப் பிற துறையினருடன் இணைந்து காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் ♦️ ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் - எனப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். #களஆய்வில்_முதலமைச்சர்


#களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஆய்வில் ஈடுபடுகிறேன். காலை, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் திட்டங்கள், வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கல் திட்டம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தேன். மக்களுக்கான திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் பயன் அவர்களைச் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

மாற்றுத்திறனாளி தோழர்களின் சுயமரியாதையைக் காத்து, அவர்களின் வாழ்வு மேம்பட நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. https://t.co/c51QsrbyhE

.@ChennaiCorp-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு! அதனை உறுதிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். #DravidianModel #WomenEmpowerment https://t.co/L7hQwN1GII


பெருமைமிகு அரசுப் பள்ளியில் பயின்று தனது அறிவுத்திறத்தால் நாட்டின் முதல் குடிமகனான அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் பயின்று - பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன். படித்து முன்னேறும் இந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும்! அறிவியல் பார்வையோடு உலக அரங்கில் #INDIA சிறந்து விளங்கும்!

A monumental evening with Madam Sonia Gandhi, @priyankagandhi, and our nation's strongest women leaders at the #WomensRightsConference. Immense gratitude to @KanimozhiDMK & @DMKWomensWing. Marching steadfast towards equality! #WomensRights https://t.co/dVmOdxyv8e

#WomensRightsConference



#Live: @dmkwomenswing - #WomensRightsConference #மகளிர்_உரிமை_மாநாடு https://t.co/twHgtUV5Lf

Honoured and elated to welcome Madam Sonia Gandhi and @priyankagandhi to Chennai. The #WomensRightsConference this evening will also see a confluence of esteemed women leaders from across the country. A powerful gathering of India's leading women's voices awaits! @KanimozhiDMK @DMKWomensWing



'வாலிபப் பெரியார்' ஆசைத்தம்பி அவர்கள் தனது இறுதி உரையில், "திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால், கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்" என்றார். அத்தகைய திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் - உறுப்பினர்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழா!

#Live: வாலிபப் பெரியார் A.V.P. ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை https://t.co/P6gMQqSkTg

Delighted to honour our #AsianGames2023 medallists from Tamil Nadu, the first state to incentivise their achievements with Rs 9.40 crore. Let's continue to nurture and recognise our talent. 🏅 #TamilNaduTalent #PrideOfIndia @Udhaystalin @SportsTN_ https://t.co/1IMhC8q8KH

#Live: #AsianGames-இல் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டுரை https://t.co/ocIg4yVKbO

I'm thrilled to announce the launch of #ProjectNilgiriTahr, a historic initiative to safeguard our State animal, the #NilgiriTahr. 🦌🌄 For over 2,000 years, this remarkable species has graced our folklore, culture, and life. Now, it's our duty to ensure its future. With a dedicated project office in Coimbatore, a lead scientist, and 4 research fellows, we are embarking on a comprehensive survey to understand and protect the Tahr's habitat and population. A generous allocation of Rs 25 Crores will support activities like habitat preservation, awareness campaigns, and more. Let's join hands to conserve these #MountainMonarchs that call the Western Ghats home. @supriyasahuias @tnforestdept @IUCN @IUCNRedList @WWFIndia #வரையாடு

Sharing a remarkable speech by our Finance Minister in the #TamilNaduLegislativeAssembly, addressing the discriminatory fund allocation to Tamil Nadu by the Union BJP Govt. Appreciate Hon'ble @TThenarasu for the erudite analysis! https://t.co/2EmVhZfYFj

உணவுத் தேவைக்காக உலக நாடுகளின் உதவியை எதிர்நோக்கியிருந்த இந்தியாவை உணவுத் தன்னிறைவு அடைய வைத்த வேளாண் அறிவியலாளர் #MSSwaminathan அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகச் சட்டமன்ற அறிவிப்பு: https://t.co/3Jqhy7RpMm