DMKSocial

The Feed, page 123

Showing 2,441–2,460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Social Justice & Reservation

மகளிர், இளைஞர், உழவர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினரையும் 'நான்கு சாதிகள்' (#FourMajorCastes) என்று குறிப்பிட்டு, பட்ஜெட் உரையிலேயே நால்வருணக்...

மகளிர், இளைஞர், உழவர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினரையும் 'நான்கு சாதிகள்' (#FourMajorCastes) என்று குறிப்பிட்டு, பட்ஜெட் உரையிலேயே நால்வருணக் கோட்பாட்டை நிதியமைச்சர் அவர்கள் திணித்திருப்பது பிற்போக்குத்தனமானது! கண்டனத்திற்குரியது! இதன் மூலம் பா.ஜ.க.வின் 'சமூகநீதி' எத்தகையது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இவர்களால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது! புதிய இந்தியாவை #INDIA கூட்டணிதான் உருவாக்கும். (2/2) https://t.co/kaGsyef62n #Budget2024 #BJPFailsIndia

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
732
26
34,425 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Industry & Investment

#Spain trip's momentum continues! Productive meetings with Hapag-Lloyd's MD Mr. Jesper Kanstrup and Director Mr. Albert Lorente resulted in a...

#Spain trip's momentum continues! Productive meetings with Hapag-Lloyd's MD Mr. Jesper Kanstrup and Director Mr. Albert Lorente resulted in a significant ₹2,500 Cr investment in southern TN. Excited to announce an MoU for cargo terminals and industrial parks, focusing mainly on #Thoothukudi and other parts of Tamil Nadu. Engaged in talks on road infrastructure with #Abertis' International and Institutional Relations Head, Lauro Berjano. Invited them to boost investments in developing Tamil Nadu's road infrastructure. The journey of investments in Tamil Nadu marches on! #InvestInTN #ThriveInTN @TRBRajaa @Guidance_TN

Industry & Investment
𝕏 X
2 yr ago
2692
99
182,009 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Federalism & Centre–State Relations

Outrageous and shameful! The arrest of Hon'ble Jharkhand Chief Minister Thiru @HemantSorenJMM is a blatant display of political vendetta by Union...

Outrageous and shameful! The arrest of Hon'ble Jharkhand Chief Minister Thiru @HemantSorenJMM is a blatant display of political vendetta by Union BJP Govt. Using investigative agencies to harass a tribal leader is a new low. This act reeks of desperation and abuse of power. BJP's dirty tactics won't silence opposition voices. Despite BJP's vindictive politics, Thiru @HemantSorenJMM stands strong, refusing to bow down. His resilience in the face of adversity is commendable. His determination to fight back against BJP's bullying tactics is an inspiration.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
12502
1599
615,976 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Sports

With numerous international sports events and the recent #KheloIndia Youth Games, Tamil Nadu is solidifying its position as the #SportsCapital of...

With numerous international sports events and the recent #KheloIndia Youth Games, Tamil Nadu is solidifying its position as the #SportsCapital of India and a global sports hub. Making history at the #KheloIndiaYouthGames2023, Tamil Nadu emerged as the Runners Up with an impressive tally of 98 medals – 38 Gold, 21 Silver, and 39 Bronze. A phenomenal performance by our U-18 champions, marking a significant podium finish for the first time. 🏆 Congratulations to Hon'ble Youth Welfare and Sports Development Minister @Udhaystalin and his entire team for the flawless execution of the Khelo India Youth Games. This achievement paves the way for our talented athletes who are the future stars! 🌟

Sports
𝕏 X
2 yr ago
1991
60
66,357 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Industry & Investment

Great strides in Spain! Met with ROCA Group's Global Director Thiru. Carlos Velazquez and ROCA India's MD Thiru. K. Nirmal Kumar, securing a ₹400...

Great strides in Spain! Met with ROCA Group's Global Director Thiru. Carlos Velazquez and ROCA India's MD Thiru. K. Nirmal Kumar, securing a ₹400 crore investment in Tamil Nadu. Also discussed potential collaborations with ACCIONA's CEO Thiru. Rafael Mateo and Water Division's CEO Thiru. Manuel Manjón Vilda, showcasing TN's prowess in power generation and water management. Our commitment to renewable energy is gaining global attention. #InvestInTN #ThriveInTN @TRBRajaa @Guidance_TN

Industry & Investment
𝕏 X
2 yr ago
2470
85
90,232 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Environment & Climate

Extremely delighted to announce the recognition of two new #Ramsar sites in Tamil Nadu - Longwood shola in Nilgiris & Karaivetti Bird Sanctuary...

Extremely delighted to announce the recognition of two new #Ramsar sites in Tamil Nadu - Longwood shola in Nilgiris & Karaivetti Bird Sanctuary in Ariyalur. This brings the total Ramsar sites in Tamil Nadu to 16, the highest in the country, with 13 sites recognised in 2022 alone after our #DravidianModel Govt came to power. A great testament to our government's relentless efforts in environmental conservation. I congratulate Hon'ble Minister Thiru @MMathiventhan, Additional Chief Secretary Tmt @SupriyaSahuIAS and officials of @tnforestdept for this international acknowledgment. #GreenTN நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து #RAMSAR பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின், 2022-ஆம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இச்சாதனை விளங்குகிறது. தமிழ்நாடு இத்தகைய உலக அங்கீகாரம் பெற உழைத்த @tnforestdept அமைச்சர் திரு @MMathiventhan & செயலர் திருமதி @supriyasahuias முதலிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். #பசுமைத்_தமிழ்நாடு!

Environment & Climate
𝕏 X
2 yr ago
2318
48
127,641 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Social Justice & Reservation

ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய...

ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்! #NoCAAInTamilNadu

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
4659
370
408,265 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Industry & Investment

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச்...

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன். எனது #UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய #GIM2024 ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன். நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது! #InvestInTN #ThriveInTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
3222
158
278,616 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Culture & Heritage

உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள்...

உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது! காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல! அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்! இதனை #மதநல்லிணக்க_நாள் ஆகக் கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். உறுதியேற்போம்... சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்! #மதவெறிக்கு_முற்றுப்புள்ளி #MahatmaGandhi #MartyrsDay

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2405
91
74,241 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Industry & Investment

ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! @IndiainSpain தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக...

ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! @IndiainSpain தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

Industry & Investment
𝕏 X
2 yr ago
7265
388
331,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Industry & Investment

கடந்த இரு ஆண்டுகளில் #UAE, #Japan மற்றும் #Singapore நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

கடந்த இரு ஆண்டுகளில் #UAE, #Japan மற்றும் #Singapore நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதேபோல, இம்முறை #Spain நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை! #InvestInTN #ThriveInTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
3569
208
146,186 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி...

மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்! இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது. “சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிந்து, ஜனநாயக அரசை நிறுவுவோம்” எனத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சகோதரர் @thirumaofficial முன்வைத்த முழக்கம் இந்தியா முழுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு வித்திடட்டும்! #வெல்லும்சனநாயகம்! #VellumSananayagam!

Party & Elections
𝕏 X
2 yr ago
4621
198
136,624 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

#Live: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'வெல்லும் சனநாயகம்’ திருச்சி மாநாட்டில் சிறப்புரை https://t.co/T5ZvIl64tg

#Live: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'வெல்லும் சனநாயகம்’ திருச்சி மாநாட்டில் சிறப்புரை https://t.co/T5ZvIl64tg

Party & Elections
𝕏 X
2 yr ago
1099
35
48,260 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Social Justice & Reservation

நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட - பழங்குடியின மக்களின்...

நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட - பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்! @Udhaystalin @Kayalvizhi_N https://t.co/3bKxV47POP

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2257
62
78,488 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Governance & Administration

பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு...

பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் திரு. @zoo_bear அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. அழியாச் செல்வமான கல்விக்குத் தனது சொத்தான நிலத்தைக் கொடையாக அளித்திட்ட ஆயி அம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும், பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட குடியரசு நாள் விருதுகளை 14 பேருக்கு வழங்கினேன். இவர்களுக்கான பாராட்டுகள் சமூகச் சேவை செய்வதற்கான ஊக்கமாக உங்களுக்கு அமையட்டும்!

Governance & Administration
𝕏 X
2 yr ago
4838
229
183,258 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Governance & Administration

Happy Republic Day to all my fellow citizens! 🇮🇳 Today, let's renew our commitment to the values that define our Indian Union - diversity,...

Happy Republic Day to all my fellow citizens! 🇮🇳 Today, let's renew our commitment to the values that define our Indian Union - diversity, equality, and unity. As we look ahead, may the coming year dismantle divisive policies, embracing an inclusive vision that truly represents the spirit of #INDIA. #RepublicDay2024

Governance & Administration
𝕏 X
2 yr ago
2944
127
86,813 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Governance & Administration

#Live: குடியரசு நாள் விழா - #RepublicDay https://t.co/0diuzOdSBo

#Live: குடியரசு நாள் விழா - #RepublicDay https://t.co/0diuzOdSBo

Governance & Administration
𝕏 X
2 yr ago
973
55
43,517 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

#CAA - #GST - #3FarmBills ஆதரவு, #NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது, சிறுபான்மையினருக்கு எதிரான முகம், தமிழுக்குப் பாரா முகம் என - பா.ஜ.க.வின்...

#CAA - #GST - #3FarmBills ஆதரவு, #NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது, சிறுபான்மையினருக்கு எதிரான முகம், தமிழுக்குப் பாரா முகம் என - பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி! அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத் தோற்கடிப்பார்கள்! எல்லா இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2189
121
71,675 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

#Live: அண்ணா நகர் - மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேருரை https://t.co/Z0qLa5vMa6

#Live: அண்ணா நகர் - மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேருரை https://t.co/Z0qLa5vMa6

Culture & Heritage
𝕏 X
2 yr ago
845
36
40,150 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று! பேரறிஞர்...

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று! பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2257
99
60,922 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41