DMKSocial

The Feed, page 119

Showing 2,361–2,380 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில்...

நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்! உங்களின் சமூக - பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்தான் நமது #DravidianModel அரசு எண்ணற்ற #WomenEmpowerment திட்டங்களைத் தீட்டி வருகிறது. சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்! #DMK4Women #IWD2024 #InspireInclusion #IWD24

Women & Child Welfare
𝕏 X
2 yr ago
2676
124
64,775 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Energy

தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 26.10.2010-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ரூ.10,158...

தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 26.10.2010-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ரூ.10,158 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட #NCTPS (Stage-III) திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். ஆணையிடப்பட்டதிலிருந்து மூன்றாண்டுகளில் முடிக்க எண்ணியிருந்த இந்தத் திட்டம், ‘கலெக்ஷன் – கரப்ஷன் – கமிஷன்’ அதிமுக ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதும் மூன்றாண்டுகளில் முடுக்கிவிட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம்.

Energy
𝕏 X
2 yr ago
2301
77
82,824 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Urban Development

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு...

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட ரூ.36.99 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.205.40 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #AnithaAchieversAcademy-இல் பயிற்சி முடித்த 482 மாணவ - மாணவியர்க்குச் சான்றிதழ், மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை 1,742 மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளோம். கட்சி, ஆட்சி இரண்டையுமே தொய்வற்ற மக்கள் பணிக்கான நல்வாய்ப்பாகவே எண்ணிச் செயல்பட்டு வருகிறோம்!

Urban Development
𝕏 X
2 yr ago
1856
69
44,988 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்...

மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன? ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம்.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3624
231
178,270 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Governance & Administration

Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu's #DravidianModel Government led by #DMK. Explore the remarkable journey of...

Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu's #DravidianModel Government led by #DMK. Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu's success story here: https://t.co/Pu1KHdqadX https://t.co/9I6PhZlqRS

Governance & Administration
𝕏 X
2 yr ago
4309
276
190,788 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Women & Child Welfare

கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் -...

கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். #தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய சகோதரி, அந்த விடுதிகளை #WellBeingCentre-களாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தார். அவரது இந்தக் கருத்து நிச்சயம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வோம்! தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்! #NeengalNalama

Women & Child Welfare
𝕏 X
2 yr ago
2668
254
182,938 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்! அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!

Party & Elections
𝕏 X
2 yr ago
5427
297
194,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Party & Elections

#எல்லோருக்கும்_எல்லாம் 161 பொதுக்கூட்டங்கள், 90 பேச்சாளர்கள், இலட்சக்கணக்கான மக்கள்! தமிழ்நாட்டை வளமாக்கும் நமது #TNInclusiveBudget-ஐ விளக்கும்...

#எல்லோருக்கும்_எல்லாம் 161 பொதுக்கூட்டங்கள், 90 பேச்சாளர்கள், இலட்சக்கணக்கான மக்கள்! தமிழ்நாட்டை வளமாக்கும் நமது #TNInclusiveBudget-ஐ விளக்கும் பொதுக்கூட்டங்கள்! #DravidianModel நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்! https://t.co/eIWT1E2nR2

Party & Elections
𝕏 X
2 yr ago
2786
196
78,394 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Governance & Administration

நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன். சிலர் போல, தேர்தல்...

நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன். சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்! நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்! #DravidianModel

Governance & Administration
𝕏 X
2 yr ago
3242
214
101,112 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Welfare Schemes

#Live: மயிலாடுதுறை - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/iHdrRSp3i6

#Live: மயிலாடுதுறை - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/iHdrRSp3i6

Welfare Schemes
𝕏 X
2 yr ago
1731
108
56,845 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Health

அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக்...

அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி! https://t.co/rmAuX4wYPl

Health
𝕏 X
2 yr ago
2913
114
83,302 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Environment & Climate

சுற்றுச்சூழலுக்கும் தூத்துக்குடி மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவித்த #Sterlite ஆலையை நிரந்தரமாக மூடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி...

சுற்றுச்சூழலுக்கும் தூத்துக்குடி மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவித்த #Sterlite ஆலையை நிரந்தரமாக மூடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது #DravidianModel அரசுக்குத் தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர். அவர்கள் வைத்த மற்ற கோரிக்கைகள் பற்றி தங்கை @KanimozhiDMK அவர்கள் எடுத்துரைத்தார். அவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும்.

Environment & Climate
𝕏 X
2 yr ago
3157
137
98,374 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

Thank you Comrade for your hearty wishes! Let us join hands in the noble pursuit of uplifting the marginalised and the proletarians, drawing...

Thank you Comrade for your hearty wishes! Let us join hands in the noble pursuit of uplifting the marginalised and the proletarians, drawing inspiration from the profound principles of Dravidianism and Communism. May we collectively strive to safeguard and cherish the values enshrined in our revered Constitution. Your support and encouragement are invaluable in this journey.

Party & Elections
𝕏 X
2 yr ago
7465
204
373,980 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Environment & Climate

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும்...

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்! @SMeyyanathan @KanimozhiDMK @ARROffice @geethajeevandmk @supriyasahuias

Environment & Climate
𝕏 X
2 yr ago
4251
228
226,102 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Party & Elections

இல்லந்தோறும் எனது குரலாக உடன்பிறப்புகள் நீங்கள் ஒலித்து, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. அதுதான் நம்மை...

இல்லந்தோறும் எனது குரலாக உடன்பிறப்புகள் நீங்கள் ஒலித்து, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. அதுதான் நம்மை எல்லாம் வார்ப்பித்த தலைவர் கலைஞர் நூற்றாண்டில் அவருக்கு நாம் செலுத்தும் நன்றி! பா.ஜ.க.வின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு, பாசிச ஆட்சியை அகற்றுவோம்! https://t.co/s3aAb6dO2S #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
2543
241
117,778 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Agriculture & Farmer Welfare

இந்தத் தொகுப்பில், 🌾 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ♦ 210.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் திறப்பு, ♦ சென்னையில் கலைஞர்...

இந்தத் தொகுப்பில், 🌾 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ♦ 210.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் திறப்பு, ♦ சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு அடிக்கல், ♦ நம்மாழ்வார் விருதுகள் 👩‍🏫கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் 🐄 கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு, புதிய கட்டடத்திற்கு அடிக்கல். @MRKPanneer @ARROffice

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1813
68
75,410 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Law & Order / Justice

காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும்...

காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
2345
129
94,278 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Culture & Heritage

இந்தத் தொகுப்பில், ☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில், ☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக்...

இந்தத் தொகுப்பில், ☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில், ☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக் குடியாத்தத்தில், ☀ ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தாத்தா இரட்டைமலையார் அவர்களுக்கு அச்சரப்பாக்கத்தில், ☀ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ☀ நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி. பன்னீர்செல்வம், ☀ பன்முகக் கலைஞர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோருக்குத் திருச்சியில் ☀ வீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்குக் கவர்னகிரியில் என, அவர்களது பெருவாழ்வைப் போற்றும் நினைவுச்சின்னங்கள், ♦ 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள், கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் சிலை, 🌪 #CycloneMichaung மற்றும் ⛈ பெருமழையால் பாதிக்கப்பட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள், 🏞 சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனக் கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள், 💧 முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் நீரொழுங்கி, 🏠 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், வட்டச் செயல்முறைக் கிடங்குகள், நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், 40 நவீன நெல்சேமிப்புத் தளங்கள்

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2098
75
71,228 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

⚡எரிசக்தித் துறை - ♦ 20 துணை மின் நிலையங்கள், நாகை மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம், 69 மின்மாற்றிகளின் செயல்பாடுகள் @TThenarasu...

⚡எரிசக்தித் துறை - ♦ 20 துணை மின் நிலையங்கள், நாகை மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம், 69 மின்மாற்றிகளின் செயல்பாடுகள் @TThenarasu @TANGEDCO_Offcl 🚇 @cmrlofficial - ♦ சென்ட்ரல் அருகே புதிய சுரங்க நடைப்பாதை 📚 @tnhrcedept - ♦ பதிப்பகப் பிரிவு மூலம் இரண்டாவது கட்டமாக 108 நூல்களை வெளியீடு, ஆலோசனைக் குழுக் கூட்டம் @PKSekarbabu 🌆 வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை - ♦ புதிய அலுவலகக் கட்டடங்கள் & குடியிருப்புகள் @KKSSRR_DMK 🏢 CMDA - ♦ 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

Governance & Administration
𝕏 X
2 yr ago
1595
70
59,794 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு, அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’...

தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு, அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்! எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!

Governance & Administration
𝕏 X
2 yr ago
3559
91
104,658 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41