2017-04 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-04 DMKSocial feed archive, page 1.
Posts
- தமிழக அரசை முடக்க நினைக்கும் மத்திய அரசின் அதிகார மீறல்கள்! https://t.co/K3PGcc8Gfv
- மத்திய அரசு உடனே #LokpalAct அமல்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில்கொண்டு,தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உடனே உருவாக்கவேண்டும்
- பாஜக அரசின் இந்தி திணிப்பு, #NEET விலக்கு அளிக்காததை மக்களிடம் கொண்டுசெல்ல மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் நடத்தப்படும். #StopHindiChauvinism...
- மின்துறை அமைச்சர் உடைந்த இரு அணிகளை சேர்க்கும் முயற்சியில் காட்டும் அக்கறையை, மின்வெட்டால் அவதியுறும் மக்கள் பிரச்சினைகளிலும் காட்ட வேண்டும்
- அதிமுக அரசு விவசாயிகளின் மரணத்தை மறைத்தது மட்டுமல்லாமல்,அவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது #FarmersSuicide
- வறட்சிக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது உண்மையா அல்லது வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லையென அஃபிடவிட் செய்திருப்பது உண்மையா?...
- கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை தமிழக மக்களின் நலனுக்காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் போராட்டங்கள் தொடரும்.
- நம் விவசாயிகளின் உரிமைகள் மீட்க முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- விவசாயிகளின் உரிமைகளைக் காக்க மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கிறது #Strike4Farmers...
- யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட வேண்டும்...
- தலைவர் @kalaignar89 அவர்களின் திருவாரூர்தொகுதியில்,மக்களின் அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்ற கோரிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினேன்...
- உலகப் புத்தக நாளான இன்றே, அறிவாலயம்தோறும் மாவட்ட கழக அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும்வகையில் நூலகங்களை உருவாக்கிட வேண்டும் #WorldBookDay...
- தமிழகம் முழுதும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்....
- #StopHindiChauvinism #stopHindiImposition https://t.co/cvN12LcZXF
- தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் #Reservation
- நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவை கொண்டு வரமுடியாத அதிமுக அரசால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டியவர்கள் வீதியில் போராடுகிறார்கள்...
- Both factions of AIADMK have surrendered before BJP. Here is my interview with @the_hindu https://t.co/aNsaLgvAcB
- "இந்திய தேச"த்தை "இந்தி தேச"மாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் #StopHindiChauvinism https://t.co/byve7aC1cT
- இந்திக்கு முதலிடம் கொடுத்து,மற்ற மொழிகள் பேசுபவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது
- #CBSE பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம், அமைச்சர்கள் இந்தியில் உரையாற்ற, அறிக்கை வெளியிட ஒப்புதல் என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்கிறது
- போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25.4.2017 அன்று மாநிலம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டது
- இன்று கலைஞர் அரங்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கட்சித் தலைவர்களை வரவேற்று பேசினேன்...
- குடிதண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிசெய்யாத பினாமி அரசு, டாஸ்மாக் ‘குடி தண்ணி’ வியாபாரத்தை எப்படியாவது பெருக்கியாவதை இலட்சியமாக கொண்டிருக்கிறது
- குற்றவாளி பினாமி அரசை அகற்ற மக்களின் போராட்டங்களுக்கு ஜனநாயகவழியில் துணைநிற்போம்.இருண்ட தமிழகம் விடிவதற்கான களப்பணிகளை அயராமல் மேற்கொள்வோம்
- காலிக் குடங்களுடன் மக்கள் வீதிகளில் போராடுவதும், தண்ணீருக்காக தமிழகம் படும்பாட்டையும் கூவத்தூரில் கும்மாளம் போட்ட ஆட்சியாளர்கள் உணரவில்லை.
- வறட்சி,பஞ்சம்,கடன் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அவர்களின் தலைவிதி போல அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது...
- "சமுதாய முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே அளவிடுவேன்" என்ற அம்பேத்கரின் பொன்மொழிகள் என்றைக்கும் பெண்ணுரிமையின் மைல்கல்
- விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 16ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் https://t.co/UbA6VtbPE9
- மக்கள் நலன் காக்கும் கழக ஆட்சி அமையும் போது இது போன்ற உயிர் தியாகங்கள் இல்லாமலேயே அருந்ததியின சமுதாயத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
- அருந்ததியினருக்கு 3% உள்இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்த திருப்பூரைச் சேர்ந்த மகேஸ்வரன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்...
- ஓபிஎஸ்,எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகஅமைச்சர்களின் ஊழலை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
- அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கும், அடாவடிகளுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தொடர்புண்டு என்பதால் ஓபிஎஸ் மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
- #RkNagar இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்....
- #RKNagar இல் முறைகேட்டில் ஈடுபட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கைக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் https://t.co/U5SguTvljB
- Watch me live on @periscopeco at 08:30pm wr I'll address abt d corrupt practices of ADMK factions in R.K.Nagar
- மாநில நலன் கருதி அதிமுக அரசில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்
- #ITraid ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்...
- படிப்படியாக மூடுவோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, மதுக்கடைகளை எதிர்த்தால் காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுவது #அதிமுக-வின் இரட்டை வேடம்
- சாமளாபுரத்தில் #Tasmac எதிரான தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்,பொதுமக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது கண்டத்திற்குரியது...
- இடைத்தேர்தலில் பணியாற்றிய தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு, நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கழகத்திற்கு மக்களிடம் அதிகரித்த ஆதரவைப் பொறுக்க முடியாமல், பணப்பெட்டியையும் சிலர் சவப்பெட்டியையும் நம்பி தேர்தல் களத்தை சந்தித்தனர்.
- #RkNagar இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது, ஆளுந்தரப்பின் முறைகேடுகளால் கழகத்தின் வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழகம் அறியும்....
- அதிகார துஷ்பிரயோகமும், பண விநியோகமும், பரிசுப் பொருட்கள் வழங்குவதும் இந்த ஆட்சி நீடிக்கும் வரை சீராகப் போவதில்லை
- தேர்தல் ஆணையத்தால் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது
- #ITraid-ல் சிக்கிய பட்டியலிலுள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் மீது CBI வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ள போதிலும் #RKNagarByPoll ரத்து செய்துள்ளது...
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை நின்று,புதுச்சேரி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கிரண்பேடி அவர்களை கேட்டுகொள்கிறேன்
- நியமிக்கப்பட்டவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குமான வித்தியாசத்தை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உணர்ந்துகொள்வது அவரின் கடமையாகும்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிர்வாகம் செய்யவிடாமல் தடுக்கும் புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது....
- இன்று காலை கொருக்குப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டேன் #RKNagarByPoll https://t.co/8pX9eh9tjq
- கொளத்தூர் தொகுதி எனது செல்ல பிள்ளை என்றால் வளர்ச்சி பெற வேண்டிய #rknagar தொகுதி எனது வளர்ப்பு பிள்ளையாக இருக்கும் என உறுதுயளித்தேன்...
- பெரா ஊழல் குற்றவாளியையும், 3 முறை முதல்வராகி எதையும் செய்யாமல் இப்போது உத்தமர் வேடம் போடும் ஓ.பி.எஸையும் புறந்தள்ள மக்கள் தயாராகிவிட்டனர்.
- ஓ.பி.எஸ்-ம், அதிமுக ஆட்சியும் புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றாமல் தமிழகத்தை குடிநீர் பஞ்சத்தில் சிக்க வைத்ததை மக்கள் உணர்ந்துள்ளனர்
- இன்று #RKnagar தொகுதியில் வீதி வீதியாகச் சென்று மாபியா அணிகளுக்கு எதிராய் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டேன்...
- அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும்
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்
- பணப்பட்டுவாடா செய்த சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய வேண்டும் #RKNagarByPoll
- விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு,பணம் பட்டுவாடாவிற்கான ஆதாரங்கள் அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டது...
- ஓரணியிலிருந்து ஊழல் செய்து இன்று தனித்தனி அணிகளாக பிரிந்து உத்தமர் வேடம் போடும் பினாமிகளின் முகத்திரைகளை இடைத்தேர்தலில் கிழித்தெறிய வேண்டும்
- உலக சுகாதார தினத்தில் பினாமி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் #ITRaid நடந்து தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியிருக்கிறது.
- வார்டு வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் ஓ.பி.எஸ், மூன்று முறை முதல்வராக இருந்தபோது ஒரு மக்கள்நல திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினாரா?
- மாலை #RKNagar தொகுதியில் ஊழல் பினாமி ஆட்சிக்கு எதிரான தி.மு.கழக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தேன்....
- ஓ.பி.எஸ் தன் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜெயலலிதாவின் உருவத்தை இந்தளவிற்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதுதான் அவர் காட்டும் நன்றிக்கடனா?
- தேசியக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச்சென்று குறுகிய அரசியல் நோக்கத்துடன் வாக்குகேட்பது மாண்பை கறைபடியச் செய்வதாகாதா?
- சவப்பெட்டியை வைத்து தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஓபிஎஸ்ஸுக்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....
- உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் அதிமுக அரசு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காதது போல, விவசாயிகளையும் வஞ்சித்து விடக்கூடாது
- விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களையும் மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்து,வறுமையின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் #StandWithFarmers...
- விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு போராடும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது...
- திமுக ஆட்சியில் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில் அம்மையார் மர்மமரணத்தில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல –ஓபிஎஸ்ஐயும் சேர்த்து விசாரணை நடத்தப்படும்
- அப்போது #RKNagar இல் திமுக பெறும் வெற்றி, ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளான இருவேறு மாபியா கும்பல்களை விரட்டிட அச்சாரமாய் அமையும் என்றேன்.
- மாலை #RKNagar வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், மார்க்கெட் பகுதியில் அவர்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தேன். https://t.co/HwutVcsFMi
- மீனவருக்கான அரசின் சலுகைகள் கிடைப்பதே இல்லையெனவும் அடிப்படை வசதிகள் எதுவும் ஊழல் பினாமி அரசால் செய்துதரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்
- இன்று காலை #RKNagar இல் நடைபெற்ற மீனவர்கள் சந்திப்பில் கலந்துரையாடி, இந்த ஊழல் ஆட்சியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தேன்....
- பிரித்திகா யாசினி போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்...
- திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் https://t.co/Ob28H6e0IC
- இளைய தலைமுறையினர் சமூக நீதி வரலாற்றை அறியக் கூடாது என்ற திராவிட எதிர்ப்பு வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு இந்த மையத்தை முடக்கி வைத்துள்ளது
- டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரும் எனில் தமிழகத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி உரிய முடிவு எடுக்கப்படும்
- மாண்புமிகு @PMOIndia தயவுசெய்து நேரம் ஒதுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்
- டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து திமுக சார்பில் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தேன்...
- விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காதது மத்திய அரசா மாநில அரசா என்று பட்டிமன்றம் நடத்தாமல் உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும் #StandWithFarmers