DMKSocial

The Feed, page 2

Showing 21–40 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Party & Elections

சண்ட செய்யிறதுதான் நம்ம வரலாறு...

சண்ட செய்யிறதுதான் நம்ம வரலாறு... https://t.co/Vp1UKl38Eu

Party & Elections
𝕏 X
25 d ago
0
80
84,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Party & Elections

அப்ப சொன்னதுதான் இப்பவும்... கண்ணியமா நடந்துக்குங்க தம்பி...

அப்ப சொன்னதுதான் இப்பவும்... கண்ணியமா நடந்துக்குங்க தம்பி... https://t.co/Iw6Rc28QSJ

Party & Elections
𝕏 X
25 d ago
0
76
88,444 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Party & Elections

காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தொடரும் விஜய்...

காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தொடரும் விஜய்... https://t.co/o1SFhD7V7k

Party & Elections
𝕏 X
25 d ago
0
94
255,726 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Party & Elections

போராளிகளின் வரலாற்றைக் கொஞ்சம் படிங்க தம்பி!

போராளிகளின் வரலாற்றைக் கொஞ்சம் படிங்க தம்பி! https://t.co/NyDAR0g8yV

Party & Elections
𝕏 X
25 d ago
0
215
508,091 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Party & Elections

வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?

வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? https://t.co/kzpwXi14L8

Party & Elections
𝕏 X
25 d ago
0
2581
5,772,147 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Social Justice & Reservation

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! OBC மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில்...

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! OBC மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்! தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல! மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும். தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது. பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Social Justice & Reservation
𝕏 X
29 d ago
0
103
249,806 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Law & Order / Justice

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல்...

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. திரு. @KN_NEHRU அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!

Law & Order / Justice
𝕏 X
1 mo ago
0
679
615,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Culture & Heritage

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல்...

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.? திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார். இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால #DravidianModel பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம். அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!

Culture & Heritage
𝕏 X
1 mo ago
0
55
58,254 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன். கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்! (1/2) #DMK4TN

Party & Elections
𝕏 X
1 mo ago
0
147
217,097 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

(2/2) #DMK4TN

(2/2) #DMK4TN https://t.co/q7BYX02PEM

Party & Elections
𝕏 X
1 mo ago
0
33
36,839 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Disaster Response & Relief

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம்...

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன். #NepalFloods #Rasuwa #FlashFlood

Disaster Response & Relief
𝕏 X
1 mo ago
0
44
182,644 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Transport & Infrastructure

Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth The announcement made today by the Hon’ble Chief...

Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations. An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling. Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment. The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP. Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States! Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth. பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்! சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்! தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!

Transport & Infrastructure
𝕏 X
1 mo ago
0
224
143,578 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Social Justice & Reservation

கலைஞரின் சமூகநீதி ஆணையால் தொடங்கிய தங்கள் பயணத்தில் அடையவுள்ள மைல்கற்கள் நிறையவே உள்ளன. தொடர்ந்து பயணியுங்கள்...

கலைஞரின் சமூகநீதி ஆணையால் தொடங்கிய தங்கள் பயணத்தில் அடையவுள்ள மைல்கற்கள் நிறையவே உள்ளன. தொடர்ந்து பயணியுங்கள்...

Social Justice & Reservation
𝕏 X
1 mo ago
0
65
144,069 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Party & Elections

அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு! Bore அடிக்கிறது என அரசியலுக்கு...

அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு! Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்! Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்! https://t.co/X6L2cDkdcL

Party & Elections
𝕏 X
1 mo ago
0
438
208,393 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Urban Development

இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும்,...

இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்! மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள். சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்! தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க! #ChennaiDay #MadrasDay

Urban Development
𝕏 X
1 mo ago
0
158
124,054 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Law & Order / Justice

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித...

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது. மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
1 mo ago
0
52
175,416 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை...

கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்! தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன். அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! #முரசொலி85 #Murasoli

Party & Elections
𝕏 X
1 mo ago
0
142
160,650 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Party & Elections

Well done, @TheAIDravidian! 🖤♥️ கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன்...

Well done, @TheAIDravidian! 🖤♥️ கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும். https://t.co/g07GDGSmSx

Party & Elections
𝕏 X
1 mo ago
0
133
275,148 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Federalism & Centre–State Relations

Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the...

Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill. கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 mo ago
0
131
238,072 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Federalism & Centre–State Relations

The delegation of the Joint Action Forum on Minorities, led by our MP Thiru. @PWilsonDMK and including top religious leaders from various...

The delegation of the Joint Action Forum on Minorities, led by our MP Thiru. @PWilsonDMK and including top religious leaders from various denominations in India, met the Hon'ble Home Minister on 6.8.2026. They urged the Hon'ble Minister to withdraw the #FCRA Amendment Bill 2026, introduced in the Lok Sabha in March 2026, and to repeal Section 15 of FCRA or refer the Bill, along with a comprehensive review of the workings of the Foreign Contribution (Regulation) Act, 2010, to a Joint Parliamentary Committee. The DMK, which has opposed the provisions of the proposed Bill from the very beginning due to their far-reaching implications, endorses this request. I appeal to the Union Government to consider the Forum’s plea in the interests of the minorities’ rights and take necessary steps in the ongoing #MonsoonSession of the Parliament.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 mo ago
0
137
439,427 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41